2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சிரமப்படும் பெண்களுக்கு உதவிசெய்யும் பயிற்சிபட்டறை

Kogilavani   / 2014 ஜூலை 27 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


அகில இலங்கை பெண்கள் சங்கமும் மெதடிஸ்த பெண்கள் திருச்சபையும் இணைந்து ஏற்பாடு செய்த சிரமப்படும் பெண்களுக்கு உதவிசெய்யும் முகமான பயிற்சிப்பட்டறை வெள்ளிக்கிழமை (25) காலை முதல் ஞாயிற்றுக்கிழமை (27) வரையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள மன்றேசா தியான இல்லத்தில் நடைபெற்ற இப்பயிற்சி பட்டறை பெண்களது மனப்பாங்குகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்;யப்பட்டிருந்து. இதன்போது, செயலமர்வுகள் நடத்தபட்டதுடன் பாடல்கள், நாடகங்கள் என்பனவும் நிகழ்த்தப்பட்டன.

இப் பட்டறையில் ஜேர்மனி, றுவண்டா போன்ற நாடுகளிலிருந்தும, இலங்கையின் கொழும்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் 55 பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

'இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு சிரமங்களை அனுபவிக்கும் பெண்களையும் அவர்களது சிரமங்களையும் இனங்கண்டு அவற்றுக்கான ஆறதல்களை உருவாக்குவது இச் செயற்திட்டத்தின் நோக்கமாகும்' என அகில இலங்கை பெண்கள் சங்கத்தின் மேற்பார்வையாளர் ஜயந்தி டேவிட், செயலாளர் ராஜினி ஜெகசோதி ஆகியோர் தெரிவித்தனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X