2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

காஸா படுகொலைகளை கண்டித்து எதிர்ப்பு நடவடிக்கை

Gavitha   / 2014 ஜூலை 29 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன், எம்.என்.எம். ஹிஜாஸ்  
   
 
புத்தளம் முஹியத்தீன் ஜும்மா பள்ளியும், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் புத்தளம் கிளையும் இணைந்து, காஸாவில் அவதியுறும் மக்களுக்காக புத்தளம் முஸ்லிம்களின் உள ரீதியான ஆதரவைத் தெரிவித்தும், இஸ்ரவேலின் மனித படுகொலைகளைக் கண்டித்தும் நிகழ்வென்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

காஸா ஈமானியச் சொந்தங்களுடன் சங்கமமாகும் புத்தளம் முஸ்லிம் உம்மத் எனும் தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது புத்தளம் சாகிறா கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை கொத்பாவைத் தொடர்ந்து இடம்பெற்றது.

பெரியபள்ளி நிர்வாகத் தலைவர் எஸ்.ஆர்.எம். முஸம்மில், புத்தளம் உலமா சபைத் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  புத்தளம் மக்கள் சார்பாக காஸா பிரகடனம் வெளியிடப்பட்டதோடு, பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டு, பொது மக்கள் தலைகளில் பட்டிகளை கட்டி சாத்வீக எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டது.

இதன்போது புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ், வட மேல் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம். நியாஸ், என்.டி. எம். தாஹிர் , புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ்.ஆர்.எம். முசம்மில் ஆகியோர் கையொப்பமிட்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X