Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கமநலசேவைப் பிரிவில் 2013 - 2014ஆம் ஆண்டு பெரும்போகத்தின்போது, வரட்சியால் விவசாயச்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகள் 352 பேருக்கு நஷ்டஈட்டுக் கொடுப்பனவுக்கான காசோலைகள் திங்கட்கிழமை (09) வழங்கப்பட்டன.
காரையடிப்பட்டி, முருங்கையடிப்பட்டி, ஊத்துச்சேனை, அக்குரானை, வடமுனை, முள்ளிவட்டுவான், சாப்பமடு, கல்வலை, புனானை, படுகாடு, ஆனைவழங்கி ஆகிய விவசாயக்கண்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கே காசோலைகள் வழங்கப்பட்டன.
வாழைச்சேனை கமநல சேவை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், வரட்சிப் பாதிப்புக்கு உள்ளான ஏக்கர் ஒன்றுக்கு 2,800 ரூபாய் படி மொத்தமாக 1,387 ஏக்கருக்கு மொத்தமாக 3,883,600 ரூபாய் வழங்கப்பட்டது.
வாழைச்சேனை கமநல சேவைகள் காரியாலய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.றீட், கிரான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .