Sudharshini / 2015 பெப்ரவரி 11 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்மா பொற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைமைக் காரியாலயம், சங்கத்தின் தலைவர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இன்று புதன்கிழமை (11) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொற்தொழிலாளர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள விஸ்வ கர்மா பொற்தொழிலாளர் கூட்டுறவு சங்கமானது இதுவரை காலமும் ஒரு அலுவலகம் இல்லாத நிலையில் வீடுகளிலேயே இயங்கி வந்தது.
மட்டக்களப்பு மாநகரசபையிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க பொதுச்சந்தை கட்டட வளாகத்தில் மேற்படி அலுவலகம்; திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட விஸ்வ கர்மா பொற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆலோசகருமான சபாபதி குருகுல சிங்கம், சிறப்பு அதிதியாக பிரபல எழுத்தாளர் பூ.மா.செல்லத்துரை, விஸ்வகர்மா பொற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள், பொற்தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago