Gavitha / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இலங்கையில் 24 மணி நேரமும் ஆகக் கூடுதலான சேவைகளை வழங்கும் திணைக்களமாக பொலிஸ் திணைக்களம் உள்ளது என காத்தான்குடி பிரிவுக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.தஸாநாயக்க தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி ஆறாம் குறிச்சி 162 கிராம உத்தியோகஸ்தர் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக்குழுவின் அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காத்தான்குடி ஆறாம் குறிச்சி 162 கிராம உத்தியோகஸ்தர் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக்குழுவின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (12) காலை 9மணிக்கு காத்தான்குடி பதுறியா ஜும் ஆப்பள்ளிவாயல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர்,
'கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின் போது, பொது மக்களுக்கு முழுமையான சேவைகளை பொலிஸாரினால் வழங்க முடியாமல் இருந்தது.
ஆனால், தற்போது நாட்டில் யுத்தம் முடிந்து அமைதியும் சமாதானமும் நிலவும் இக்கால கட்டத்தில், பொலிஸார் பொதுமக்களுக்கு முழுமையான சேவைகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கையில் 24 மணி நேரமும் ஆகக் கூடுதலான சேவைகளை வழங்கும் திணைக்களமாக பொலிஸ் திணைக்களம் உள்ளது.
தற்போது பொலிஸ்-பொதுமக்கள் உறவு என்பது மேம்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தயக்கமின்றி தமது பிரச்சினைகளை பொலிஸாரிடம் கூறும் நிலை உருவாகியுள்ளது.
கிராம மட்டத்தில் இயங்குகின்ற சிவில் பாதுகாப்புக் குழுக்களின் மூலம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற் கொள்ளமுடியும்.
டெங்கு போன்ற ஆட் கொல்லி நோய்கள் இன்று நமது பிரதேசங்களை தாக்க தொடங்கியுள்ளன. இதன்போது, நாம் கவனமாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி ஆறாம் குறிச்சி 162 கிராம உத்தியோகஸ்தர் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எம்.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர மற்றும் காததான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.கருணாகரன், காத்;தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்;தின் உட்பட பிரதேச செயலக நிருவாக உத்தியோகஸ்தர்கள் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதுடன் நடமாடும் சேவையும் நடைபெற்றது.


4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago