Sudharshini / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தின் முன்பாக டெங்கு ஒழிப்பு தொடர்பான வீதி நாடகம் இன்று வியாழக்கிiமை (12) நடித்துக்காட்டப்பட்டது.
இதன்போது, டெங்கு தொடர்பான விழிப்புணர்வு பாடல்கள் பாடப்பட்டதுடன், துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பாலமுனை, ஒலுவில், தீகவாபி, அட்டாளைச்சேனை ஆகிய கிராமங்களில் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 35 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என வைத்திய அதிகாரி பறூஸா தெரிவித்தார்.
இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகரித்த ஒரு நிலையினைக் காட்டுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
டெங்கின் அபாயம், பாதிப்பு மற்றும் டெங்கிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையை பணிமனை முன்னெடுத்துவருவதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
சுகாதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.நக்பர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago