2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

டெங்கு நுளம்புகள் பரவும் சூழலை வைத்திருந்த 25 பேர் மீது சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகரசபை பிரிவிலுள்ள நாவற்குடா பிரசேத்தில் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் வீடுகள் மற்றும் சுற்றுப்புறச்சூழலை வைத்திருந்ததாகக் கூறப்படும்  25 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு நாவற்குடா பிரசேத்துக்கு  பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் வி.செனவிரட்ன தெரிவித்தார்.

நாவற்குடாப் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.ஆர்.வி.ரஞ்சன்,  மண்முனை வடக்கு உதவி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஜி.மதனழகன் ஆகியோரின் வழிகாட்டலில் இந்த டெங்கு பரிசோதனை இடம்பெற்றது.

பொலிஸார், இராணுவத்தினர், கிராம உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மட்டக்களப்பு மாநகர சபை அதிகாரிகள் என 92 பேர்  டெங்கு பரிசோதணையை மேற்கொண்டனர்.
இதன்போது 1,016 வீடுகளும் வெற்றுக்காணிகளும் சோதனை செய்யப்பட்டன.

டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் வீடுகள் மற்றும் சுற்றுப்புறச்சூழலை வைத்திருந்ததாகக் கூறப்படும் 25 பேருக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், டெங்குச் சூழலுக்கு காரணமாக இருந்த பராமரிப்பற்று கிடந்த 25 வெற்றுக்காணிகளும் மட்டக்களப்பு மாநகரசபைக்கு சொந்தமாக்கப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர் வி.செனவிரட்ன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X