Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறியமைக்காக கடந்த வருடத்தில் 1,055 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு, 15 இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் இணைப்பதிகாரி ஏ.எல்.ஜௌபர் சாதிக் தெரிவித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய வகையில் செயற்பட்டவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தண்டம் விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்
கடந்த வருடத்தில், பிரதேச செயலக ரீதியாக கோறளைப்பற்று வடக்கு 07, கோறளைப்பற்று மேற்கு 74, கோறளைப்பற்று 60, கோறளைப்பற்று மத்தி 92, கோறளைப்பற்று தெற்கு 18, ஏறாவூர்ப்பற்று 102, மண்முனை மேற்கு 57, மண்முனை வடக்கு 171, காத்தான்குடி 175, மண்முனைப்பற்று 59, மண்முனை தென்மேற்கு 17, மண்முனை தென்னெருவில்பற்று 57, போரதீவுப்பற்று 03, ஏறாவூர் நகரம் 102 போன்ற பகுதிகளில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை இணைப்பதிகாரி தெரிவித்தார்.
அதேநேரம், கடந்த வருடத்தில் நுகர்வோர்களை விழிப்பூட்டும் வகையிலும் பாசாலை மாணவர்கள், விற்பனைளாயர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலும் என 60 விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், செயற்பாடுகளிலும் மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை ஈடுபட்டதாகவும் இணைப்பதிகாரி தெரிவித்தார்.
காலாவதியான பொருட்கள் விற்பனை, விலை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலையில் விற்பனை, பொறிக்கப்பட்ட விலையில் மாற்றம் செய்தமை, உற்பத்தி, காலாவதித் திகதி குறிப்பிடாமை, நிறை, அளவுகள் குறிப்படப்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அரசாங்க அதிபரின் பணிப்பிற்கிணங்க நுகர்வோரின் நன்மை கருதி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலாவதியான பொருள்கள் விற்பனை செய்தமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை போன்ற காரணங்களுக்காக அதிகமாக தண்டம் விதிக்கப்பட்டது.
2013ஆம் ஆண்டு இவ்வாறு நுகர்வோர் சட்டங்களை மீறியமைக்காக 665 பேருக்nகு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு 11 இலட்சத்து 70 ஆயிரத்து 400 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago