Gavitha / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராகேணியில்; அமைந்துள்ள நீர்க் கேணிக்குள் விழுந்து ஒன்றரை வயது பெண்குழந்தை உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (13) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மீராகேணி, கலந்தர் வீதியில் வசிக்கும் யூசுப் இஸ்மாயில் பாத்திமா றிபாஸா (ஒன்றரை வயது) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
வீட்டில் இருந்த குழந்தை காணாமல் போயுள்ளது. இதனைத்தொடர்ந்து குழந்தையை தேடுவதற்காக, அக்குழந்தையின் பெற்றோர் குழந்தையின் கால்பாத தடங்களைத் தொடர்ந்து தேடிச் சென்றுள்ளனர்.
இதன்பொழுது குழந்தை நீர்க் கேணிக்குள் இறந்து கிடந்துள்ளது.
பின்னர், குழந்தையின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
ஏறாவூர் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago