2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிள்களை மீள ஒப்படைக்குமாறு கோரிக்கை

Gavitha   / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

31.12.2014ஆம் திகதிக்குப் பின்னர் கட்டணப்பணம் செலுத்தி மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொண்ட அனைத்து வெளிக்களப்பணிகளில் ஈடுபட்டுள்ள அரச உத்தியோகஸ்தர்களும் தமது மோட்டார் சைக்கிள்களை மீள ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தினை செயற்படுத்தும் திட்டத்தின் கீழ், வெளிக்களப்பணிகளில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் மோட்டார் சைக்களுக்காக ஒரே தடவையில் வழங்கப்படும் கட்டணத்தினை 31.12.2014ஆம் திகதிக்குப் பின்னர் அறவிடவேண்டாமென அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அவ்வாறான உத்தியோகஸ்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறும் தேசிய வரவு-செலவு திட்ட பொது திறைசேரி பணிப்பாளர் நாயகத்தினால் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் 31.12.2014ஆம் திகதிக்குப் பின்னர் மோட்டார் சைக்கிள்களுக்காக பணம் செலுத்திய உத்தியோகஸ்தர்கள் சார்பாக பொதுதிறைசேரி பணிப்பாளர் நாயகத்தை தொடர்பு கொண்டு, உரிய மோட்டார் சைக்கிள்களை உத்தியோகஸ்தர்களுக்கு வழங்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின்  ஒப்பத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

பொது திறைசேரி பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி கிடைக்கும் வரை 31.12.2014ஆம் திகதிக்குப் பின்னர் மோட்டார் சைக்கிள்களுக்காக பணம் செலுத்தி மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொண்ட அனைத்து உத்தியோகஸ்தர்களும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களை 13.2.2015க்கு முன்னர் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X