2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

காணி தொடர்பான விளக்கமளிக்கும் நிகழ்வு

Gavitha   / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-

வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் பிரதேச செயலாளர் பிரிவில் அடிப்படை காணிச்சட்டம் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வொன்று, வெள்ளிக்கிழமை (13) கடுக்காமுனை கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் எஸ்கோ நிறுவன அனுசரணையுடன்  நடைபெற்றது.

இதில் பிரதேச காணி உத்தியோகஸ்தர் எஸ்.ஞானப்பிரகாசம், அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.சிவநடராசா ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு விளக்கமளித்தனர்.

இதன்போது, காணி உரித்து, சொந்தக் காணிக்கு இருக்க வேண்டிய ஆவணங்கள், றூட், பேர்ச், ஏக்கர், ஹெக்டயர் போன்ற விபரங்கள் தொடர்பாகவும் பொதுமக்கள் பின்பற்றவேண்டிய காணிச்சட்ட நடைமுறைகள் பற்றியும் விளக்கமளிக்கபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X