Gavitha / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
துறைமுகங்கள் மற்றும் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று (14) முற்பகல் மட்டக்களப்பிலுள்ள உள்ளூர் விமான நிலையத்துக்கு விஜயம் செய்தார்.
இதன்போது, மட்டக்களப்பு உள்ளூர் விமான நிலையத்தினை பார்வையிட்டதுடன் இங்கு இடம்பெற்றுள்ள அபிவிருத்தி பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
மட்டக்களப்பு விமான நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரயாணிகள் ஓய்வெடுக்கும் மண்டத்தையும் விஸ்தரிக்கப்பட்டுள்ள விமான ஓடுபாதையையும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதன்போது பார்வையிட்டார்.
மட்டக்களப்பு விமான நிலையம் மற்றும் அதன் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதன் அபிவிருத்தி போன்ற விடயங்களை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, மட்டக்களப்பு விமானப்படை தலைமையக கட்டளைத்தளபதி கே.கே.ஏ.கே.களு ஆராய்ச்சியிடம் கேட்டறிந்து கொண்டார்.
உள்ளூர் விமான சேவைகளின் அபிவிருத்தி தொடர்பாக பார்வையிட்டு வருவதாகவும் உள்ளூர் விமான சேவையியை சிறந்த முறையில் மக்களுக்கு வழங்கச்செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த அடிப்படையில், மட்டக்களப்பிலுள்ள உள்ளூர் விமான நிலையத்தின் அபிவிருத்திப்பணி அதன் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக மட்டக்களப்புக்கு வருகை தந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அவருடன், துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் விஜயம் செய்திருந்தனர்.


4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago