2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஏறாவூர் பஸ் டிப்போவுக்கு மேலுமொரு பஸ் வண்டி

Kogilavani   / 2015 பெப்ரவரி 15 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஏறாவூர் பஸ் டிப்போவுக்கு பஸ் வண்டியொன்று வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட்டின் வேண்டுகோளை ஏற்று உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் ஏறாவூர் டிப்போக்கு ஏற்கனவே அவரால் வழங்கப்பட்ட 10 பஸ் வண்டிக்கு மேலதிகமாக மேலும் ஒரு பஸ் வண்டியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பயணிகளின் வசதி கருதி ஏறாவூர் டிப்போ முகாமையாளர் எம்.ஹனி கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் ஏறாவூர் பஸ் டிப்போவுக்கு ஒதுக்கப்பட்ட பஸ் வண்டி போதாது என்றும் இன்னும் மேலதிகமாக பஸ் வண்டிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  


பயணிகள் நலன் கருதி பஸ் வண்டிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றமையால் இந்த கோரிக்கையை உடன் கவனத்தில் எடுத்த முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட், போக்குவரத்து பிரதி அமைச்சரிடம் உரிய நிலைமையை விளக்கி கூறியதையடுத்து ஏறாவூர் பஸ் டிப்போவுக்கு மேலதிகமாக ஒரு பஸ்வண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X