Sudharshini / 2015 பெப்ரவரி 15 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 130 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (14) ஏறாவூர் அல் அஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சுபைர் ஹாஜியார் பவுண்டேசனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வறிய பயனாளிகளுக்கு குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்காக தலா 5480 ரூபாவுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
அங்கு உரையாற்றிய பிரதித் தவிசாளர்,
இலங்கையில் எந்தப் பிரதேசத்திலும் இல்லாத அளவு எமது ஊரில் மாத்திரம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் குவிந்து கிடக்கின்றன. ஆனால், அந்த அரசியல்வாதிகளால் பிரதேசத்தின் வறிய மக்களுக்கு எந்த பயனில்லை.
சென்ற ஆட்சியில் ஒரு கெபினட் அமைச்சர், மாகாண அமைச்சர், மாகாணசபை பிரதி தவிசாளர், நகரபிதா என்று ஏறாவூர் அரசியல்வாதிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இன்றைய ஆட்சியில் எமது பிரதேசத்தில் மாகாண முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், மாகாண சபை பிரதித் தவிசாளர், மாகாண சபை உறுப்பினர் என அரசியல் பிரதிநிதித்துவம் மேலும் சிறப்படைந்து காணப்படுகிறது.
இப்பதவிகளைக் கொண்டு எமது மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க நாம் பாடுப்படவேண்டும் என அவர் தெரிவித்தார்.
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago