2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'வீர வசனம் பேசிப்பேசியே பின்நோக்கி செல்கின்றோம்'

Kogilavani   / 2015 பெப்ரவரி 15 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்,வா.கிருஸ்ணா


'நாம் கப்பல் ஓட்டிய தமிழர்கள், ஆதி,அந்தம் இல்லாதவர்கள், கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் தோன்றியவர்கள் என்றெல்லாம் வீர வசனம் பேசிப்பேசியே ஏனையவர்களை விட நாம் பின்நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். பேச்சுக்கு ஏற்றால் போல் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை தெரிவித்தார்.


மக்கள் சந்திப்பு நிகழ்வு நேற்று (14) களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.


இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,


'எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் எமது மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் கிராமங்களுக்கு எவ்வாறான உதவிகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டதே தவிர இது வேறு எந்த அரசியல் நோக்கத்துக்காகவும்; மேற்கொள்ளப்படவில்லை. எதிர்கால தேர்தல் செயற்பாடுகளுக்காவும் மேற்கொள்ளப்படவில்லை.


தமிழனாக தன்மானத் தமிழனாக வாழ வேண்டும் என்பதற்காக போராடிக்கொண்டிருக்கின்றேன். ஒரு சிலர் நினைப்பது போன்று மாற்றான் காலடியில் மண்டியிடுவதற்குரியவன் நான் அல்ல.


பல சோதனை வேதனைகளுக்கு மத்தியில் நாம் எமது மக்களுக்காக எமது இனத்துக்காக போராடும் போது மாகாணசபை விவகாரத்தில் சிலரின் எண்ணங்கள் இங்கு நிறைவேறாது. என்னை வெளியேற்றினால் தான் அவர்களின் காரியம் ஈடேறும் என்பதால் நான் வெளியேற்றப்பட்டேன்.


நாம் கடந்த காலங்களில்விட்ட தவறுகளை மேலும் தொடரக் கூடாது. மாறி மாறி வந்த அரசாங்கங்கள் பல துன்பங்களை நடத்தியிருக்கின்றன. அப்படி இருந்தும் நாம் சலைக்கவில்லை.


கல்வியில் முன்னேறிய இனமாக இருந்தோம். ஆனால் தற்போது எம்மை விட ஏனைய இனத்தவர்கள் அனைத்து விதத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள். நாம் பின்நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம். எமது கலாசாரம், பண்பாடு கல்வி போன்றவற்றை வளர்ப்தற்கு எமது கிராமங்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் முக்கியஸ்தர்கள் அனைவருடனும் கலந்துரையாடி முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


நமது இனம் தீண்டாமை என்ற செயற்பாட்டினால் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக ஆதி அந்தம் இல்லாத எமது இனமும் கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் தோன்றிய எமது சமயமும் குந்தி இருப்பதற்கு ஒரு நாடு இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கின்றோம்.   எமது இனத்தினை பாதுகாப்பதற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை கிரமம் தோறும் மேற்கொள்ள வெண்டும்.


இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வருடங்களுக்கு மன்னர் 65 வீதமாக இருந்த நாம் இப்போது 40 வீதமாக இருக்கின்றோம். மனமாற்றம், மதமாற்றம் என்ற ரீதியில் நாம் பிரிக்கப்பட்டு விட்டோம். ஆத்துடன் சாதிவெறி மதவெறி என்வற்றால் நாம் பின்னடைந்து இருக்கின்றோம்.


தற்போதைய நிலையில் எமது வாக்குரிமைதான் எமக்கு இருக்கும் ஒரே சொத்து. மது கஞ்சா போனற் இதர விடயங்களுக்காக நாம் எமது வாக்குகளை விற்கக் கூடாது. எமது மக்களை நேசிப்பவர்கள் யார் யார் என அறிந்து நாம் ஆதரிக்க வேண்டம்.


எமது கிழக்கு மாகாணசபையில் 11 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருந்தும் எமது மாற்றத்தினால் வந்த ஜனாதிபதியிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடமும் கிழக்கு மாகாணசபை விவகாரம் தொடர்பில் பல தடைவைகள் நாம் பேசியும் பாராமுகமாக்கப்பட்டுள்ளோம்.


2005ஆம் ஆண்டு மஹிந்தவை ஜனாதிபதியாக்கியதும் எமது தமிழ் மக்களே தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு அமர்த்தியதும், தற்போதைய பிரதமரையும் அமைச்சரவையையும் ஏற்படுத்தியதும் தமிழர்களே.
ஆனால் இன்று அவர்களால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றோர்களோ என்ற சந்தேகம் எழுகின்றது. இந்நிலையில் இவ்வாறன நிலை தொடர்ந்தால் இவர்களும் தமிழ் மக்களால் ஏமாற்றப்பட்டு புறக்கணிக்கப்படுவார்கள்' என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X