Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவிலுள்ள நாவற்குடா மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்ட டெங்கு சோதனையின்போது, டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில் காணப்பட்ட 29 வெற்று வீடுகள் மற்றும் காணிகளை மட்டக்களப்பு மாநகரசபை சுவீகரித்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவில் பரவுகின்ற டெங்கை கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார், பிரதி ஆணையாளர் எஸ்.தனஞ்சயன் ஆகியோரின் வழிகாட்டலில், டெங்கு சோதனையும் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டமும் மேற்படி இரு பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, 29 வீடுகள் மற்றும் காணிகள் மட்டக்களப்பு மாநகரசபையினால் சுவீகரிக்கப்பட்டு, இந்த இடங்களில் மட்டக்களப்பு மாநகரசபையினால் சுவீகரிக்கப்பட்ட இடம் என்று அறிவித்தலும் போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், 927 வீடுகள் இதுவரையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
15 குழுக்களாக பிரிக்கப்பட்டு பொதுச் சுகாதார பரிசோதர்களினால் வழிநடத்தப்பட்ட இந்தச் சோதனையில் பொலிஸார் மற்றும் மாநகரசபை ஊழியர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago