Princiya Dixci / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் அரையாண்டுக்கான சோதனைகள் திங்கட்கிழமை (16) ஆரம்பமாகின.
இதன் முதலாவது பரிசோதனை நடவடிக்கைகள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க தலைமையில் இச்சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன.
பொலிஸ் நிலையத்தில் பாவனையிலுள்ள ஜீப் வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் உட்பட அனைத்து வாகனங்களும் சோதிக்கப்பட்டன.
மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களிலும் இத்தகைய அரையாண்டு சோதனைகள் பொலிஸ் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாவற்குடா மைதானத்தில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.
இதன்போது, மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.தஸாநாயக்கா காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர உட்பட பலர் கலந்துகொண்டனர்.





2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago