Kogilavani / 2015 பெப்ரவரி 15 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு பலக்லைக்கழக கல்லூரியில் தொடர்பாடலுக்கான ஆங்கிலம் எனும் குறுகிய கால பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(15) கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரி நிர்வாகப்பணிப்பாளர் எஸ்.எம்.அதீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு பலக்லைக்கழக கல்லூரியின் ஸ்தாபகரும் அதன் தலைவருமான மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டு பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இந்த வைபவத்தில் கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் கல்லூரி பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் அதன் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த வைபவத்தில் கல்லூரி விரிவுரையாளர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டன.
இதன்போது தொடர்பாடலுக்கான ஆங்கிலம் எனும் குறுகிய கால பாடநெறியை பூர்த்தி செய்த 70 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகப்பணிப்பாளர் எஸ்.எம்.அதீக் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பலக்லைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்ட குறுகிய கால பாடநெறியை பூர்த்தி செய்து வெளியேறிய முதல் தொகுதி மாணவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago