Kogilavani / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (16) புளியடிமுனை அ.த.க.பாடசாலையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு றொட்டறிக் கழகம் மற்றும்; தமிழ்நாடு வேலூர் மாவட்ட றொட்டறிக் கழகங்களின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ரூபாய் 1500 பெறுமதியான 150 புத்தகப்பைகள் மற்றும் காலணிகள் கொக்குவில், புளியடிமுனை அ.த.க. பாடசாலை மற்றும் நாவலடி நாமகள் வித்தியாலய மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
புளியடிமுனை அ.த.க.பாடசாலையின் அதிபர் எஸ்.சேகர் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்மட்டக்களப்பு மாவட்ட றோட்டறிக் கழகத் தலைவர் டொமிங்கோ ஜோர்ஜ், இந்திய சர்வதேச றொட்டறிக் கழக்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் ஏ.சம்பத்குமார், தமிழ்நாடு வேலூர் மாவட்ட றொட்டறிக் கழகத்தின் முன்னாள் தலைவர்களான எஸ்.பாலசுப்பிரமணியம், இந்திரா சுப்பிரமணியம், ரி.ஆர்.தனங்சேகர் மற்றும் மட்டக்களப்பு றொட்டறிக் கழகத்தின் உதவி ஆளுநர் வினோபா இந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago