Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபை பிரிவில் டெங்கு அவசர நிலைமை காரணமாக மூடப்பட்ட முன்பள்ளிகள், அல் குர்ஆன் பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக கல்வி நிலையங்களை மீளத்திறப்பது தொடர்பான கூட்டம் புதன்கிழமை (18) காலை 9 மணிக்கு காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.
காத்தான்குடி நகரசபை பிரிவில் கடந்த ஜனவரி மாதம் டெங்கு நோயாளர்கள் அதிகரித்தமையால், 2.2.2015 அன்று முதல் அங்கு டெங்கு அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காத்தான்குடியிலுள்ள் முன்பள்ளிகள், குர்ஆன் பாடசாலைகள், பிரத்தியேக கல்வி நிலையங்கள் ஆகியவற்றை மூடுவதுடன், இவற்றையும் சுற்றுப்புறச்சூழலையும் சுத்தம் செய்து காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதனை சோதனை செய்த பின்னர் திறப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே இவற்றை மீளத்திறப்பது தொடர்பான கூட்டம் நடைபெறவுள்ளது.
இது இவ்வாறிருக்க, காத்தான்குடி நகரசபை பிரிவில் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி 16ஆம் திகதிவரை 76 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago