Gavitha / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
முன்பள்ளி சிறுவர்களை வழிநடாத்தும் டிப்ளோமா பயிற்சியை முடித்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (17) மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
கலிபோனியாவிலுள்ள றோட்டறிக் கழகத்தின் நிதியுதவியினால் நடத்தப்பட்ட இப்பயிற்சிக்காக ரூபாய் 25 மில்லியன் பெறப்பட்டதாக இலங்கை றோட்டறிக் கழகத்தின் முன்னாள் ஆளுனர் றோட்டறியன் தர்சன் ஜோன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கல்முனை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 320 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா மற்றும் மண்முனை மேற்கு வலயங்கிலிருந்து 80 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் மற்றும் திருகோணமலை வலயங்களிலிருந்து 120 பேரும் கல்முனை மாவட்டத்தில் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று வலயங்களிலிருந்து 120 பேரும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
மட்டக்களப்பு றோட்டறிக் கழகத் தலைவர் டொமிங்கோ ஜோர்ஜ், றோட்டறியன்களான சுமந்த சுமணசேனன், கிழக்கு மாகாண இறை வரித் திணைக்கள ஆணையாளர் எம். கணேசராஜா, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா மற்றும் திருகோணமலை, கல்முனை றோட்டறிக் கழகத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
உலகில் 12 இலட்சம் பேர் அங்கத்தவர்களாகவுள்ள இக்கழகத்தில் இலங்கையில் 60 கழகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


46 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
59 minute ago
3 hours ago