Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வடிவேல் சக்திவேல்
வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்கள் தங்களது வாழ்வில் முன்னேறவேண்டுமானால், பிறரில் தங்கியிருப்பதை தவிர்க்கவேண்டும் என்று இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் ரீ.வசந்தராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சின்னவத்தை கிராமத்தில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சின்னவத்தை கிளை வருடாந்த பொதுக்கூட்டம் திங்கட்கிழமை (16) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
'ஒவ்வொரு கிராமத்திலும் தேவைகளும் பிரச்சினைகளும் வெவ்வேறு மாதிரியாக உள்ளன. இவற்றை தீர்ப்பதற்காக அரசாங்கமும் அரசசார்பற்ற நிறுவனங்களும் காலம் காலமாக செயலாற்றி வருகின்றபோதிலும், பெரியளவில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை.
மில்லியன் கணக்கான ரூபாய் பணம் அபிவிருத்திக்காக வருடாந்தம் செலவிடப்படுகிறது. ஆனால், எதிர்பார்த்த பயனை முழுமையாக அடைந்ததாக தெரியவில்லை.
தொடர்ந்து ஏழை மக்களிடையே எதிர்பார்ப்பும் பிறரில் தங்கியிருக்கின்ற நிலமையுமே அதிகம் வளர்ந்திருக்கிறது. இத்தகையதொரு போக்கு, சமூக அபிவிருத்திக்கு மிகவும் குந்தகமானது.
வீதிகளும் பாலங்களும் கட்டடங்களும் பௌதிக ரீதியான அபிவிருத்தியாக இருக்கின்றதேயொழிய, மக்கள் வாழ்வில் அபிவிருத்தியையும் அவர்களது மனங்களில் மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை. ஏழைகள் தொடர்ந்தும் ஏழைகளாகவே இருந்துகொண்டிருக்கின்றனர்.
இத்தகைய துரதிர்ஷ்ட நிலை மாறவேண்டுமானால், பிறரில் தங்கியிருப்பதை விட்டு தன்னம்பிக்கையோடு உங்களை நீங்களே நம்பவேண்டும். உழைப்பினால் உயர்வதற்கு திடசங்கற்பம் பூணவேண்டும்.
இதற்காக செஞ்சிலுவை தொண்டர்கள் அனர்த்த காலங்களில் மேற்கொள்கின்ற அவசர நிவாரண பணிகளோடு நின்றுவிடாமல், சாதாரண காலங்களில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த பாடுபடவேண்டும்' என்றார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago