Gavitha / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு - மண்முனைபற்று பிரதேசத்தின் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வாண்டியொன்று இல்லாமையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த 10.12.2014 அன்று வைத்தியசாலையின் அம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் அது இன்று வரை வைத்தியசாலைக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக சிறப்பான வைத்தியசேவையை செய்ய முடியாமல் உள்ளதாக சுட்டிக்காட்டி முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரான பூ.பிரசாந்தன் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரனுக்கு திங்கட்கிழமை (16) கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்தாவது..
'மண்முனைப்பற்று பிரதேசத்தின் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர் அம்புலன்ஸ் இன்மையினால் நோயாளர்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஆரையம்பதி தொடக்கம் கிரான்குளம் வரைக்கும் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேசம் உள்ளிட்ட நோயாளர்களுக்கு வைத்தியசேவை வழங்கி வரும் இந்த ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ், கடந்த வருடம் 10.12.2014ஆம் திகதி விபத்துக்குள்ளானது.
அன்றிலிருந்து அம்புலன்ஸ் வண்டி இன்மையினால் அவசரசிகிச்சை நோயாளர்களையும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்வதற்கான நோயாளர்களையும், ஏனைய வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வாகனத்தை கோரியே கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
அம்புலன்ஸ் தாமதமாக கிடைப்பதன் காரணத்தினால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அண்மையில் ஆரையம்பதி மாவிலங்கத்துறையில் ஒருவர் எரியுண்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட போதும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்காக தாமதமான காரணத்தினால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. இதனை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
மண்முனைப்பற்று, மண்முனை தென்மேற்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு வைத்தியசேவை வழங்கிவரும் மிகவும் பழமை வாய்ந்த மாவட்ட வைத்தியசாலையாக இந்த ஆரையம்பதி வைத்தியசாலை காணப்படுகின்றது. இதன் சேவை சிறப்பாக காணப்படும் நிலையில், இவ்வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வாகனத்தை துரிதமாக வழங்குவதன் மூலம் வைத்திய சேவையை சிறப்பாக மேற்கொள்ள துணைபுரியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago