2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பிரியாவிடை நிகழ்வு

Gavitha   / 2015 பெப்ரவரி 17 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெறும் இந்து கருணாரட்னவுக்கு செவ்வாய்க்கிழமை (17) மாலை மட்டக்களப்பில் பிரியாவிடையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவில் நடைபெற்ற இந்த பிரியாவிடை வைபவத்தின் போது, பொலிஸ் அணி வகுப்பு மரியாதை இடம் பெற்றதுடன், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் ஜெயசிங்கவினால் நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் ஜெயசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அநுரத்ஹக்மன பண்டார உட்பட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேற்படி பிரதி பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ன 35 வருடம் பொலிஸ் சேவையில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X