Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 18 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பள்ளிவாசல்களில் கடமையாற்றுகின்ற கதீப்மார், இமாம்களின் நலன்கள் எப்போதும் கவனிக்கப்படவேண்டும் என்று காத்தான்குடி பள்ளிவாசல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.
காத்தான்குடி பள்ளிவாசல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம், காத்தான்குடி அல்மனார் அறிவியல்; கல்லூரியின் அல்றாசித் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது. இதன்போதே பொதுச் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
'பள்ளிவாசல்களில் கடமையாற்றுகின்ற கதீப்மார், இமாம்களின் சேவை மகத்தானது. இவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை எமது காத்தான்குடி பள்ளிவாசல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனம் கவனிக்கின்றது. இவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது, அவற்றை நாம் முன்னின்று தீர்க்கின்றோம்' எனக் கூறினார்.
இதன்போது, புதிய நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது. புதிய தலைவராக மௌலவி கே.எம்.எம்.மன்சூர் பலாஹி, பொதுச் செயலாளராக மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா பலாஹி, பிரதி தலைவராக மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை பலாஹி, உப தலைவராக அல் ஹாபிழ் ஏ.எம்.மின்ஹாஜுதீன் பலாஹி, பொருளாளராக எம்.எல்.எம்.றகீப் பலாஹி உட்பட 11 பேர் கொண்ட நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது.
சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.ஆதம்லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் அஸ்ஸெய்ஹ் எஸ்.ஏ.எம்.அன்சார் நழீமி, மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி), மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் பலாஹி உட்பட உலமாக்கள் கதீப்மார்கள், இமாம்கள் கலந்துகொண்டனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago