Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 18 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
ஜனநாயகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக மாநகரசபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் செயற்;பாடுகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கும் நோக்கோடு கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவினால் அதன் தலைமை அலுவலகமான எதுல்கோட்டை, ஸ்ரீஜெயவர்த்தனபுரவில் வைத்து திங்கட்கிழமை (16) தனக்கு நியமனக்கடிதம் வழங்கப்பட்டதாகவும் சிவகீதா பிரபாகரன் தெரிவித்தார்.
சிவகீதா பிரபாகரன் கடந்த 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாநகரசபையின் மேயராக தெரிவுசெய்யப்பட்டார்.
பின்னர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்ததன் பின்பு அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் மற்றும் வதிவிடம் என்பன தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago