Princiya Dixci / 2015 பெப்ரவரி 18 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் 361பேர் டெங்கு காய்ச்சல் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்தியப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை அண்மைக்காலமாக அச்சுறுத்திவரும் டெங்கு காய்ச்சல் தாக்கம் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி ஆகிய பகுதிகளிலேயே டெங்குக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நுளம்பு பெருக்கமுள்ள பகுதிகள் இனங்காணப்பட்டு அப்பகுதியில் துப்புரவு நடவடிக்கைகள், மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் பிராந்திய சுகாதார அதிகாரிகள் காரியாலயம் ஊடாக விழிப்புணர்வு நடவடிக்கைகளும் அதனைத் தொடர்ந்து பரிசோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஆரம்பித்து இரண்டு மாதங்களுக்குள்ளேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் மூன்று பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago