2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில்; புச்சாக்கேணி, கதிரவெளியைச் சேர்ந்த  4 பிள்ளைகளின் தந்தையான ப.தயாபரன் (வயது 37) என்ற குடும்பஸ்தர்  நேற்று புதன்கிழமை (18) உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

வியாபார நடவடிக்கைகளை முடித்துவிட்டு தனது வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, பால்சேனை - திருமலை வீதியில் குறுக்கே நின்ற கட்டாக்காலி மாடு ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றது. இதன்போது,   தலையில் படுகாயமடைந்த இவர்,  வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையிலேயே இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X