Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இந்து ஆலயங்களில் சேர்த்துவைக்கப்படும் பணத்தின் ஒருபகுதியை அந்தந்தப் பிரதேசங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று -1 கோட்டக்கல்வி அதிகாரி எம்.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை (19) தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் இந்து விவகார அலுவல்களுக்கு பொறுப்பானவரும் மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவைத்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனிடமே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இது பற்றி எம்.பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த முப்பது வருடகால யுத்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டது. அதேவேளை, இயற்கை இடர்களான சூறாவளி, மழை, வெள்ளம், வரட்சி போன்றவற்றாலும் பாதிக்கப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்வியும் பாதிப்படைகின்றது. இவ்வேளையில், பொது அமைப்புக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களுக்கு கைகொடுத்து உதவவேண்டும்;.
குறிப்பாக, ஆலயங்களில் உள்ள பணம் அந்தந்தக் கிராம மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட வேண்டும். இது பற்றி ஆலய அறங்காவலர்கள் அதிக அக்கறை எடுத்துச் செயற்படவேண்டும். இது விடயமாக இந்து விவகாரங்களிலும் ஆலய நடவடிக்கைகளிலும் அதிக ஈடுபாடு காட்டிவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் தான் வேண்டுகோள் விடுத்தபொழுது, அது பற்றி ஆலய அறங்காவலர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்திருக்கின்றார். வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ஆலயங்கள் அக்கறை எடுக்குமாக இருந்தால், அது வறுமைப்பட்ட சமூகத்தில் சிறந்த கல்விப் பெறுபேறுகளை அடைய உதவும்' எனக் கூறினார்.
இந்த விடயம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரிடம் கேட்டபொழுது, 'பல ஆலயங்கள் அதிக நிதி வளத்துடன் இருந்தாலும், அந்த நிதி வளத்தைக்கொண்டு அந்த ஆலய பரிபாலகர்கள் சமூக சேவைகளைச் செய்ய முன்வருவதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
உண்மையில் இந்த விடயம் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டும். சமூக சேவைக்கு உதவாமல் வெறுமனே ஆலயங்களில் பணத்தைச் சேர்த்து வைப்பதில் அர்த்தமில்லை. இது விடயமாக எல்லா ஆலய நிர்வாகத்தினரோடும் கலந்து பேசி ஆலயங்களிலுள்ள பணத்தை வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களின் நல்வாழ்வுக்கு பயன்படுத்த வழிவகை காணவேண்டும்' எனக் கூறினார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago