2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

முன்னிலை சோஷலிசக் கட்சியினால் கையொப்பங்கள் பெறல்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு நகரில் வியாழக்கிழமை (19) முன்னிலை சோஷலிசக் கட்சியினால் பொதுமக்களிடமிருந்து கையொப்பங்கள் பெறப்பட்டன.

குமார் குணரத்தினத்தினத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே,  அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் போனவர்களையும் கடத்தப்பட்டவர்களையும் மீட்டுத்தரவேண்டும் ஆகிய  கோரிக்கைகளை முன்வைத்து  கையொப்பங்கள் பெறப்பட்டன.

இதன்போது, குமார் குணரத்தினம் உட்பட நாடு கடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்காதே எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

மட்டக்களப்பு நகரிலுள்ள பிரதான பஸ் தரிப்பு நிலையத்துக்கு  முன்பாக முன்னிலை சோஷலிசக் கட்சியினால் கட்டப்பட்டிருந்த பெனரில் பொதுமக்கள் கையொப்பங்கள் இட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X