Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்டாலும், அதற்கு அடுத்த நிலையில் முக்கியத்துவமிக்க அமைச்சு பதவி தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், இரு கட்சிகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வை மீள்பரிசீலிக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று வியாழக்கிழமை (19) புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் கிழக்கு மாகாணசபையிலும் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக இராணுவத்துக்கு ஒப்பான ஆட்சி இங்கு நடைபெற்றது. அந்த நிலை இன்று மாற்றத்துக்கு வந்துள்ளது. கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்தவர்கள் எமது பகுதியை புறக்கணித்தனர்.
கிழக்கு மாகாணசபையில் அதிகூடிய ஆசனங்களை பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் இறுதிவரை முயற்சித்தது. ஆனால், அந்த முயற்சி கைகூடவில்லை. தமிழர்; ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு அதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு எங்களுக்காக உதவுவதற்கு; யாரும் இல்லாத நிலை இருந்தது.
ஏழு ஆசனங்களுடன் இருந்த முஸ்லிம் காங்கிரஸ், மாற்றுக் கட்சிகளை இணைத்து தங்களது ஆசனங்களை பத்தாக அதிகரித்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் கடந்தகால ஒப்பந்தத்தை புதுப்பித்து முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டுள்ளது.
எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில்; இன ஐக்கியம் பேணப்படவேண்டும். இணைந்த வட, கிழக்கு உருவாகவேண்டும். எமது மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் உருவாகும் ஆட்சியில் பங்குபற்றவேண்டும் என்ற முடிவு எடுத்துள்ளோம்.
மேலும், இன்று இந்த ஆட்சியில் நாங்கள் பங்குதாரர்களாக வரவேண்டும். எமது சமூகத்தின் எதிர்காலம் நல்லதாக மாறவேண்டும். இணைந்த வடகிழக்கில் தமிழ் மக்கள் சுயாதீனமாக ஆட்சி அமைத்து வாழவேண்டும் என்பதற்காக இந்த நகர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ளது' என்றார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago