2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஸ்ரீ இராமகிருஷ்ணரின் ஜெயந்தி தின விழா

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் 180ஆவது ஜெயந்தி தின விழா மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ணமிசனில் இன்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்றது.

இராமகிருஷ்ணமிசன் தலைவர் சுவாமி சதுர்புஜாந்தர் மகராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இல்ல மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் மிசனிலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதி, நொச்சிமுனை வீதி, பழைய கல்முனை வீதி, கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் வழியாக மிசனை வந்தடைந்தது.

மங்களாரதி, கொடியேற்றம், பூஜை, அகண்டநாம பஜனை, ஆராத்தி என்பன இடம்பெற்று சுவாமியினால் ஆசீர்வாதம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X