Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடிப் பிரதேசத்தில் முச்சக்கரவண்டிகளில் பயணம் செய்வோருக்கான கட்டணம் நூற்றுக்கு பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி முச்சக்கரவண்டிகள் சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் என்.எம்.அபுல்பஸல் தெரிவித்தார்.
நேற்று (19.2.2015) வியாழக்கிழமை தொடக்கம் இந்த நடைமுறை காத்தான்குடி முச்சக்கரவண்டிகள் சாரதிகள் நலன்புரிச் சங்கத்தினால் காத்தான்குடி பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதேநேரம் காத்தான்குடி முச்சக்கரவண்டிகள் சாரதிகள் நலன்புரிச் சங்கத்தில் காத்தான்குடியிலுள்ள ஐநூற்றுக்கும் மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எமது சங்கத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள முச்சக்கரவண்டிகளில் பயணம் செய்வோருக்கான கட்டணம் நூற்றுக்கு பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
46 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
59 minute ago
3 hours ago