Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
வாவி முகாமைத்துவத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வாவியின் எல்லையை பேணும் நோக்கோடு தென்னைமரங்களை நடுவதற்காக பயனாளிகளுக்கு தென்னைமரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (20) திமிலைதீவில் இடம்பெற்றது.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு மாவட்ட கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களத்தினால் குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் செலவில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டத்திற்காக 400 தென்னைமரங்கள் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு நடுவதற்காக வழங்கப்பட்டன.
வாவியில் மீன் இனங்கள் அழிவடைந்து வருவதனால் 370 கி.மீ. நீளமான வாவிக்கரையை பாதுகாக்கும் நோக்கோடு கண்ணா மற்றும் தென்னைமரங்களை வைத்து எல்லையிடும்; திட்டத்திற்காக 33 மில்லியன் ரூபாய் சர்வதேச விவசாய அபிவிருத்தி அமைப்பு மற்றும் உலக சுற்றாடல் மையம் என்பவற்றினால் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக மாவட்டத் திட்ட இணைப்பாளர் ஏ.கோகுலதீபன் தெரிவித்தார்.
சுனாமி, வெள்ளம், யுத்தம், மீன்பிடி மற்றும் வேளாண்மை செய்தல் என்பவற்றினால் வாவிக்கு அருகில் உள்ள தாவரங்கள் அழிக்கப்பட்டதனால் குறித்த மரங்களை நடுவதனால் வாவியின் எல்லையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் வாவியின் அரிப்பை கட்டுப்படுத்தலாம்.
உப்புநீரில் தென்னை வளர்வதாலும் கண்ணா மரத்தில் மீன்கள் வளர்வதாலும் குறித்த மரங்களை நடும் திட்டத்தினால் வாவி பாதுகாக்கப்படுவதோடு பயனாளிகளின் பொருளாதாரமும் உயர்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago