Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா
சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவலின் 158ஆவது ஜனன தினத்தையொட்டி அவரின் சிலை மட்டக்களப்பு நீரூற்றுப்பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (22) நிறுவப்பட்டது. இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட சாரணர் இயக்கத்தின் ஆணையாளர் பி.ஆனந்தராஜா, பேடன் பவலின் சிலையை திரைநீக்கம் செய்துவைத்தார்.
இதன்போது, சாரணர் விழிப்புணர்வு ஊர்வலமும் நீரூற்றுப்பூங்காவிலிருந்து ஆரம்பமாகி, மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை சென்றடைந்தது.
1998ஆம் ஆண்டு நகரமுனை வீதியில் நிறுவப்பட்ட இந்தச் சிலையானது, 2010ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்ட நிலையில் புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் இயக்கத்தின் பொருளாளர் ஏ.றொபட், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் வி;.சுகுமாரன், மாநகர பொறியியலாளர் ரி.தேவதீபன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago