Gavitha / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
வாகரை கடலில் சட்டவிரோதமான முறையில் டைனமைட் மூலம் மீன்பிடியிடியில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்திணைக்கள உதவி பணிப்பாளர் ஏ.ஏ.பரீத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் திங்கட்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த கடலில் சட்டவிரோதமான முறையில் டைனமைட்டை பயன்படுத்தி மீன்பிடித்துவிட்டு, பிடிக்கப்பட்ட மீன்களை ஏற்றிவரும்போது, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாரின் உதவியுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் பெருமளவிலான மீன்கள் ஏற்றிவந்த வாகனம், சட்டவிரோத வலைகள், டைனமைட் உட்பட மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பன வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago