Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 23 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்
பால்நிலை சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு கல்குடா பலநோக்கு மண்டப கட்டடத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்றது.
தேவை நாடும் மகளிர் அமைப்பினரினால் கல்குடா பொலிஸாரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பேத்தாழை விநாயகபுரம், கல்குடா, கல்மடு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்து 200 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது வீட்டு வன்முறைகள் தடுக்கும் முகமாக ஆண், பெண்களுக்கிடையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு நீக்கப்பட்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
இதன் நிகழ்வில் கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தர்மிக நவரெட்ன, தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்டத்தரணி அருள்வாணி சுதர்சன், திட்ட இணைப்பாளர் அபிராமி ஜெயச்சந்திரன் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சங்கீத தர்மரஞ்சன் மற்றும் கிராம சேவகர் ஜெ.லோபனராஜ் ஆகியோர்; அதிதிகளாக கலந்துகொண்டனர்.

46 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
59 minute ago
3 hours ago