2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தலைமைத்துவ பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 பெப்ரவரி 23 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இருநாள் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி பயிலும் இந்து மாணவர்கள் மற்றும் இந்து இளைஞர்கள், அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ இருநாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு மாமாங்கம் விக்னேஸ்வரா திருத்தொண்டர் சபை மண்டபத்தில் சனி மற்று ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி பி.எழில்வாணி, மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் அமிர்தலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த  250க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.

சமூகத்தில் இளம் சமூதாயம் மத்தியில் ஆன்மீக ரீதியான சிந்தனையினை ஏற்படுத்தி அதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தினை கட்டியெழுப்பும் வகையில் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X