Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு அறிமுக அடையாள அட்டைகளை வழங்கும் பணியை கிழக்கு மாகாண தபால் திணைக்களத்தின் நிர்வாக காரியாலயம் மேற்கொண்டுள்ளது.
16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இந்த அறிமுக அடையாள அட்டைகள் வழங்கும் தபால் திணைக்களத்தின் நடமாடும் சேவை நடைபெற்றுவருகின்றது. இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலய மாணவர்களுக்கான அறிமுக அடையாள அட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கிவைக்கப்பட்டன.
நாளையதினம் அம்பாறை மாவட்டத்தில் இதற்கான் நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாண தபால் திணைக்களத்தின் பிராந்திய நிர்வாக உத்தியோகத்தர் மதனசேகரம் தம்பிஐயா தெரிவித்தார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago