2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இயற்கை விவசாய காணிப்பயன்பாடு குறித்த விழிப்புணர்வூட்டல் நிகழ்வு

Sudharshini   / 2015 மார்ச் 04 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

உயர்தர மாணவர்களிடையே இயற்கை விவசாய காணிப்பயன்பாடு குறித்த விழிப்புணர்வூட்டல் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் அல்-அஷ;ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (03) காணிப்பயன்பாட்டு திட்டமிடல் உத்தியோகத்தர் ரீ. மல்லிகா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷழதா ஷpரீன் இயற்கை விவசாய காணிப்பயன்பாடு குறித்து உயர்தர மாணவிகளுக்கு விளக்கமளித்தார்.

அங்கு மாணவர்களுக்கு அவர் விளக்கமளிக்கையில்,

காணிப் பயன்பாட்டு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தினூடாக, பயன்படுத்தப்படாமல்  தரிசுநிலமாக இருக்கும் காணிகளை பயன்படுத்தி முடியும்.

அத்துடன், சேதனப்பசளைப் பயன்பாடு மனித குலத்துக்கும் இயற்கையை தொடர்ந்து பேணுவதற்கும் நன்மையளிக்கக் கூடியது. மனிதனுக்கும் இயற்கைக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயன பாவினையிலிருந்து சேதன இயற்கை விவசாயத்துக்கு மனித குலம் திரும்புவதன் மூலம், சூழல் பாதுகாப்பும் உடல் ஆரோக்கியமும் இயற்கை வளங்களை நீடித்து நிலைக்கக் கூடியதாக அபிவிருத்தி; செய்யவும் முடியும்.

மேலும், சம காலத்தில் பழக்கப்பட்டுப் போன அதிகரித்த இரசாயனப் பாவனையும் துரித உற்பத்தித் தொழில்நுட்பங்களும் மனித ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் கேடு விளைவிக்கக் கூடியவை.

இயற்கைச் சமநிலை பாதிக்கப்படுவதால் உலகில் மனிதர்கள் மட்டுமல்ல ஏனைய உயிரினங்களும் தாவரங்களும் உயிர்வாழ முடியாத நிலை ஏற்பட கூடும் என அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X