Suganthini Ratnam / 2015 மார்ச் 04 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்;டமைப்பில் இருக்கின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவானவர்கள் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை கொண்டுசெல்லவிடாமல் சதி செய்வார்கள். இது மாத்திரமின்றி உட்கட்சிப் பூசல்களும் வெடிக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபையில் நாங்கள் கடுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளோம். வேலை வாய்ப்புக்களின்போது கூட, தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து இவ்வாறு புறக்கணிக்கப்பட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியிலிருந்து உடனடியாக வெளியேறும் என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கிழக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்களாக செவ்வாய்க்கிழமை (03) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு புதன்கிழமை (4) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
'கிழக்கு மாகாணசபையில் பல கட்சிகளின் ஆட்சி மலர்ந்துள்ளமை வரவேற்கத்தக்கது. இந்த இணக்க ஆட்சி நிலைக்கவேண்டுமானால், மாகாணசபையிலுள்ள எதிர்க்கட்சியிலிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முழுமையாக இணையவேண்டும். இருவர் மாத்திரமே இணைந்து அமைச்சர்கள் ஆகியுள்ளனர். இல்லாதுவிட்டால், அவர்கள் எதிர்க்கட்சியிலிருந்துகொண்டு குழப்புவார்கள்.
கிழக்கு மாகாணமானது மூன்று இனங்களும் வாழ்கின்ற மாகாணமாகும். இந்த மாகாணத்தில் இவ்வாறான ஆட்சி நடப்பதே சிறந்தது. இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய விட்டுக்கொடுப்புகளையும் செய்துள்ளன' எனக் கூறினார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago