2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கற்றல் உபரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 மார்ச் 05 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி அப்ரார் பகுதியில் இயங்கிவரும் உமர் சனசமூக நிலையத்தின் பாலர் பாடசாலை பாலர்களுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை(3) பிற்பகல் வழங்கி வைக்கப்பட்டன.


நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கல்வி மையத்தில் இந்த வைபவம் நடைபெற்றது.


இதன்போது காத்தான்குடி நகரசாபை உறுப்பினர் எம்.எச்.எ.மிஹ்ழார், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சூறாசபை உறுப்பினர்களான எம்.ஏ.காதர், எம்.ஏ.அலீம் மற்றும் உமர் சனசமூக நிலையத்தின் உறுப்பினர்கள் உட்பட உமர் பாலர் பாடசாலையின் பாலர்கள், ஆசிரியைகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மிகவும் கஷ்டமான நிலையில் இயங்கிவரும் இந்தப் பாலர் பாடசாலைக்கான வசதிகளைச் செய்துதர வேண்டும் என்று உமர் சனசமூக நிலையத்தின் நிர்வாகிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் இந்த கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்ககள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X