2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மட்டு. தொண்டர் ஆசிரியர்களை காந்திபூங்காவில் ஒன்றுகூடுமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 06 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டு தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்காக நடைபெற்ற  தேர்வில் தோற்றியும்; ஆசிரியர்களாக உள்வாங்கப்படாதவர்களை நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு  மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒன்றுகூடுமாறு மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஐயமுத்து ரவிச்சந்திரன்,

'2007ஆம் ஆண்டு தேர்வில் தோற்றியபோதிலும், நியமனம் வழங்கப்படாத தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகளை கடந்த காலத்தில் அரசாங்கங்களின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதிலும், எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புதிய அரசாங்கம் பதவியேற்ற நிலையில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் யாரும் வெளிப்படுத்தாத நிலையில், அவற்றினை வெளிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது' என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X