Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 06 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஆசிரியர் இடமாற்றங்கள் தேசிய இடமாற்றசபையின் மூலமே மேற்கொள்ளப்படவேண்டும் என கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஜெயராஜா இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
'கிழக்கு மாகாண கல்வி வலயங்களில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், தன்னிச்சையான தீர்மானங்களின் மூலம் ஆசிரியர் இடமாற்றங்களை மேற்கொள்கின்றனர். அத்தோடு பழிவாங்கும் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன.
நீதி நியாயத்துக்காகப் போராடும் ஆசிரியர்களுடன் அதிகாரிகள் சவால் விடுதல் போன்ற அற்பத்தனமான செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் அதிகம் காணப்படும் இடமாக திருகோணமலை கல்வி வலயம் காணப்படுகின்றது. இந்த நிலைமை உடனடியாக மாற்றியமைக்கப்படவேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் வருடாந்தம் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெறுகின்ற அதேவேளை, அதிபர்களுக்கான இடமாற்றங்கள் இடம்பெறுவதில்லை. இது ஒரு பாரபட்சமான ஏற்றத்தாழ்வு நடவடிக்கையாகும்.
ஐந்து வருடங்களை பூர்த்திசெய்த அதிபர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படவேண்டியது அவசியமாகும். இவ்வாறு அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடமாற்றங்கள் வழங்குவதன் மூலம் ஏற்றத்தாழ்வுகள், நிர்வாகச் சீர்கேடுகள், நிதிமோசடிகள் போன்ற ஊழல்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கும் ஆசிரியர்கள் அதிபர் உறவைப் பேணுவதன் மூலம் பாடசாலைகளின் அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கும் வழியேற்படுத்திக் கொடுக்கமுடியும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago