2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தமிழ்மொழி டிப்ளோமா பயிற்சியை 135 சிங்களமொழி மூல பொலிஸார் நிறைவுசெய்துள்ளனர்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 06 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ்மொழி டிப்ளோமா பயிற்சியை 135 சிங்களமொழி மூல பொலிஸார் நிறைவுசெய்துள்ளனர். 5 மாதங்களைக் கொண்ட இப்பயிற்சியை 9ஆவது குழுவினர் நிறைவுசெய்துள்ளதாக பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பாளர் யு.அருளானந்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில், கலை நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (06) கல்லடி பொலிஸ் பயிற்சிக்கல்லூரியில் நடைபெற்றன.
2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சிக் கல்லூரியில் இதுவரையில் 1000 பொலிஸார் தமிழ்மொழி பயிற்சியை மேற்கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் உபுல் ஜயசிங்க, தமிழ்மொழி பயிற்சிக்கல்லூரியின் உதவிப் பணிப்பாளர் எஸ்.பி.ஜினதாச, கல்லூரியின் பிரதான விரிவுரையாளர் கே.பேரின்பராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X