Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 06 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் மர்ஹும் அஸ்ஸஹீத் ஏ அகமட் லெவ்வையின் 27ஆவது ஞாபகார்த்த வைபவம் இன்று வெள்ளிக்கிழமை காலை காத்தான்குடி ஹிழுறியா பள்ளிவாசலில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியின் செயலாளர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி பலாஹி,
'இனங்களுக்கிடையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதிலும் சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு ஐக்கியத்தை உருவாக்குவதிலும் மர்ஹும் அஸ்ஸஹீத் ஏ அகமட் லெவ்வை அயராது பாடுபட்டவர். அத்துடன், சமூக சேவையாளர்களுக்கு முன் மாதிரியாகவும் மர்ஹும் அஸ்ஸஹீத் ஏ அகமட் லெவ்வை திகழ்ந்தவர் ஆவார்.
இவ்வாறான ஒரு சமூக சேiவாளர் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதம் இன்றைய ஆறாம் திகதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். அன்னார் விட்டுச் சென்ற சமூக சேவை இன்றும் அவரை நினைவு கூறுகின்றது' என்றார்.
இந்த வைபவத்தில் காத்தான்குடி காதி நீதிபதியும் காத்தான்குடி உலமா சபை தலைவருமான மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உப தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் உட்பட பள்ளிவாசல் சம்மேளன முக்கியஸ்தர்கள், உலமாக்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago