2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி ஆற்றங்கரையோரத்தை பொழுதுபோக்கிடமாக மாற்ற ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 06 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஆற்றங்கரைப்பகுதியில் பொழுதுபோக்கு இடம் மற்றும் மைதானம்  அமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நகரசபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி ஆற்றங்கரைப்பகுதியில்; குப்பைகள் கொட்டப்பட்ட இடத்திலேயே பொழுதுபோக்கு இடம் மற்றும் மைதானம்  அமைக்கப்படவுள்ளதாகவும் இந்த நிலையில், தற்போது குறித்த பகுதியில் நிலத்தை செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மக்களின் நன்மை இவை அமைப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை பார்வையிட்ட பின்னரே, அவர் இதனைக் கூறினார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த  அவர்,

'மக்களுக்கு நாம்  வாக்குறுதி வழங்கியதை போன்று, காத்தான்குடி பிரதேச அபிவிருத்திப்பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே எமது திட்டமிடலின் அடிப்படையில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்வதற்கு அனுமதி கிடைக்கப்பெற்று வேலைகள் செய்து முடித்துள்ளோம். செய்தும் கொண்டுடிருக்கின்றோம்

ஊர் வீதி, டெலி கொம் வீதி, பாம் வீதி அபிவிருத்திகளின் முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு தற்போது ஆட்சி மாற்றத்தின் பிற்பாடு தாமதமாகியிருந்தன. ஆனால், தற்போது வீதி அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் எம்.ஹாசிமினால் இந்த வீதிகளுக்கான அனுமதி கிடைத்துள்ளது.  இதன் பூர்வாங்கவேலைகள் விரைவில் தொடரும். அத்துடன், எதிர்வரும் ஏப்ரல் 06ஆம் திகதி காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய நூதனசாலையை திறக்க எண்ணியுள்ளோம்' எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X