Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 மார்ச் 06 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
வட, கிழக்கு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட 'ஆறுதல்' நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்துக்கான கிளை அலுவலகம் கல்முனை - பாண்டிருப்பு பிரதான வீதியில் வியாழக்கிழமை (5) திறந்து வைக்கப்பட்டது.
நிறுனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் முன்னாள் செயலாளருமான சுந்தரம் திவகலாலா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
'பாடசாலைக் கல்வியை முடித்து விட்டு மாணவர்கள் வெறும் கையுடன் புத்தகப் பூச்சிகளாக சமூக வாழ்வுக்குத் திரும்புகின்றனர் என்றால் அதற்கு நான் உட்பட கல்வித்துறை சார்ந்த அனைவரும் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளார்கள்' என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago