2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உணவு விடுதிகளில் சுகாதாரம் பேணப்படாவிடின் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 மார்ச் 06 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு நகரில் உணவு விடுதிகளில் சுகாதாரம் பேணப்படாதுவிட்டால், அந்த உணவு விடுதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று  மட்டக்களப்பு, வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் சோ.அமுதமாலன் தெரிவித்தார்.

வெட்டுக்காடு பொதுச்சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள உணவு விடுதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேற்று  வியாழக்கிழமை திடீர்ச் சோதனை மேற்கொண்டனர். அத்துடன், உணவு விடுதியொன்றிலிருந்து  சுகாதாரத்துக்கு உகந்த முறையில் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த பெருமளவு உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாக வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் சோ.அமுதமாலன் தெரிவித்தார்.

குறித்த உணவு விடுதியில் பணியாளர்களாக பணியாற்றிவருகின்றவர்களில் ஐந்து பேர் மருத்துவ சான்றிதழ்; இல்லாமல் பணியாற்றுவதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் உள்ள உணவு விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள், விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுவருகின்ற நிலையில் சிலர் இih  கருத்தில்கொள்ளாமல் செயற்பட்டுவருகின்றனர்.

பொதுமக்கள் சுகாதாரத்துக்கு தீங்கில்லாத வகையில் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் நாங்கள் அவதானிப்புடன் செயற்பட்டுவருவோம். எதிர்காலத்தில் உணவு விடுதிகளில் சுகாதாரம் உரிய முறையில் பேணப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு வெட்டுக்காடு பொதுச்சுகாதார பிரிவுக்குட்பட்ட ரொசேரோ வீதியில் குப்பைகளை கொட்டிய மூன்று பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் சோ.அமுதமாலன் தெரிவித்தார்.

வீதியில் குப்பைகள் கொட்டப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு காணப்பட்ட குப்பைகளைக்கொண்டு குப்பை கொட்டியவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X