Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 07 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் ,எம்.எஸ்.எம்.நூர்தீன்
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் நான் கிழக்கு மாகாண சபையில் மாகாண சபை பிரதித் தவிசாளர் என்கின்ற பெரும் அந்தஸ்தில் இருந்தேன். ஆனால் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்த பின்னர், உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை தேசிய அரசில் எனது பதவி பறிக்கப்பட்டு நான் இப்பொழுது வெறுங்கையோடு நிற்கின்றேன் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் மீராகேணிக் கிராமத்தில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையமொன்றை வெள்ளிக்கிழமை (06) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு; உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாண சபையில் தேசிய அரசாங்கத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தேசிய காங்கிரஸும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் திருகோணமலைக்கு வந்த ஜனாதிபதி உங்களுக்கு பதவிகள் கிடைக்கவில்லையா என்று என்னிடம் கேட்டார். எனக்குப் பதவி கிடைக்காவிட்டால் பரவாயில்லை. மக்களுக்கு நன்மை தரக்கூடிய எதையாவது புதிய ஆட்சியாளர்கள் செய்தால் சரி என்று நான் ஜனாதிபதியிடம் சொன்னேன்.
எனவே, மாகாண சபையில் தேசிய அரசாங்கம்; அமைத்திருப்போர் தமது பழைய பல்லவியை உடனடியாக மூட்டை கட்டி வைத்துவிட்டு, கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களை ஒற்றுமைப்படுத்துக்கும் அவர்களை அபிவிருத்தியின் பாதையில் அழைத்துச் செல்லவும் வழிவகை காணவேண்டும்.
கிழக்கு மாகாணத்திலுள்ள ஏழைப் பெண்கள் எவரும் இனிமேல் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, வீட்டுப்பணிப்பெண்களாக அடிமை வேலை செய்ய இமளிக்க முடியாது என்று கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் ஆதங்கமாக அறிக்கை விட்டிருப்பதை நான் ஊடகங்கள் மூலமாக அறிந்தேன்.
அதனால்தான் படித்து விட்டு வேலையற்றிருக்கும் பெண் பிள்ளைகளுக்கு அவர்கள் சுய கௌரவத்தோடு, தமது வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ளும் வகையில் சுய தொழில் திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளளேன். அதன் ஒரு கட்டமாக இப்பொழுது தையல் பயிற்சி நிலையங்களை அமைத்து வருகின்றேன்.
கிழக்கு மாகாண சபையிலே எனக்குப் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் நலனுக்காகவும் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகத்தின் ஐக்கியத்துக்காக நானும் எனது அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் அவரது தேசிய அரசுக்கும் என்றும் ஆதரவளிப்போம்.
ஆனால், கிழக்கு மாகாண சபை அரசியல் வியாபார கூடாரமாக மாறாதவரை எமது ஆதரவு தொடர்ந்து இருக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபை உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான எம்.எஸ்.எம். நஸீர், பயனாளிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago